இலங்கை மூதாட்டி ஒருவரை மிகவும் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கிற வழக்கில் இளைஞன் ஒருவருக்கு ஜேர்மனியில் ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
52 வயது உடைய மூதாட்டியை 22 வயது உடைய இளைஞன் கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி கேர்ன் நகரத்தில் காருக்குள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார்.
மூதாட்டி பஸ்ஸை தவற விட்ட நிலையில் செய்கின்றமைஅறியாமல் வீதியில் நின்று கொண்டு இருந்தார் என்றும் - அந்நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்த இளைஞன் உதவி என்கிற பெயரில் மூதாட்டியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் என்றும் - காரை மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு சென்ற பின்னர் மிகவும் கொடூரமாக கற்பழித்தார் என்றும் - பின்னர் மூதாட்டியின் கையடக்கத் தொலைபேசி, பணம் ஆகியவற்றையும் அபகரித்துக் கொண்டார் என்றும் - புலனாய்வு விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இக்கையடக்கத் தொலைபேசிதான் இளைஞனைப் புலனாய்வுப் பொலிஸாருக்கு காட்டிக் கொடுத்தது.
இளைஞன் கையடக்கத் தொலைபேசியை சொந்தப் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
வல்லுறவு இடம்பெற்று ஒரிரு வாரங்களில் இளைஞனை இலகுவாக புலனாய்வுப் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
மிகவும் அண்மைய நாட்களில் ஜேர்மனியில் இடம்பெற்று இருந்த மிகக் கொடூரமான வல்லுறவுக் குற்றம் இதுவே ஆகும்.
கற்பழிப்பின்போது மூதாட்டி பல தடவைகள் மயக்கம் போட்டு விழுந்து இருக்கின்றார்.
மூதாட்டியின் நாக்கு உட்பட உடலின் பல உறுப்புக்களையும் கடித்துக் காயப்படுத்தி இருக்கின்றார் இளைஞன்.
மூதாட்டி தெய்வாதீனமாக மரணத்தில் இருந்து தப்பி இருக்கின்றார் என்று நிபுணர்கள் இருவர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
மூதாட்டி மன்றில் ஆஜராகி சாட்சியம் வழங்கினார்.
இளைஞனும் மன்றில் ஆஜராகி வழக்கு நடவடிக்கைகளை அவதானித்தார்.
தெய்வாதீனமாக மரணத்தில் இருந்து மீண்டு இருக்கின்றார்.
போகும் நகர நீதிமன்றம் இவரைக் குற்றவாளியாக கண்டு தீர்ப்பு அளித்தது.
மூதாட்டி, மூதாட்டியின் குடும்பத்தினர் ஆகியோரிடம் இளைஞன் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்.
இளைஞன் ஒரு மாணவன் ஆவார்.