மரம் ஒன்றின் உச்சியில் கூடு... இல்லை .... வீடு கட்டி உள்ளார் ஒரு சீன இவரின் பெயர் Xiong Yuhu. வயது-63. தொழில் விவசாய. Hunan மாவட்டத்தில் வாழ்கின்றார்.
மரத்தின் 50 அடி உயர உச்சியில் இந்த வீட்டை கட்டி இருக்கின்றார். குளியல் அறை, சமையல் அறை, இளைப்பாறும் அறை ஆகியன இவ்வீட்டில் அமைக்கப்பட்டு உள்ளன. குளியல் அறையில் மலசல கூடம், ஷபர் ஆகியன உள்ளன. கூரையில் தண்ணீர் தாங்கி ஒன்று உள்ளது.இத்தாங்கியில் இருந்து குளியல் அறைக்கு நீர் வழங்கப்படுகின்றது. இளைப்பாறும் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் உள்ளது. மரத்தில் ஆன ஏணி ஒன்று நிலத்துக்கும்,வீட்டுக்கும் இடையில் இணைத்துக் கட்டப்பட்டு உள்ளதுவளர்ந்தவர்கள் 18 பேர் ஒரே நேரத்தில் இவ்வீட்டில் தங்கி இருக்க முடியும் என்றும் பாதுகாப்பானது என்று கூறுகின்றார். இவ்வீட்டை கட்ட இவருக்கு இது வரைக்கும் 3,000 அமெரிக்க டொலர் வரை செலவாகி உள்ளது என்கின்றார்.
.
ஆனால் மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இவ்வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவே பயப்படுகின்றார் இவரின் மனைவி.
இவ்வீட்டை கணவர் பெரிதும் விரும்புகின்றார் என்றும் காலை உணவை உட்கொண்ட பின் இவ்வீட்டுக்குள் செல்கின்ற கணவன் மதிய போசணம், இரா போசணம் ஆகியவற்றுக்காக மாத்திரமே கீழே இறங்கி வருகின்றார் என்றும் கூறுகின்றார்.
No comments:
Post a Comment