தென்கொரிய நாட்டில் உள்ள முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆங்கில பாடம் கற்பித்துக் கொடுக்க ஆரம்பித்து உள்ளன.
30 ரோபோக்கள் வரை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
ரோபோ கைத்தொழில் துறையை வளர்த்து எடுக்கும் நிகழ்ச்சி நிரலின் கீழ் இத்திட்டம் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆசிரிய ரோபோக்களில் ஒருவருக்குப் பெயர் இங்கேய்.
முட்டை வடிவத்தில் ஆன உருவம் உடையவர். வெள்ளை நிறம் கொண்டவர்.
டேய்கு நகரத்தில் உள்ள 21முன்பள்ளிகளில் கற்பிக்கின்றார்.
ஆசிரிய ரோபோக்களினது உயரம் ஒரு மீற்றர்.
இவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு TV display panel பொருத்தப்பட்டு உள்ளது.
நடமாடும சக்கர கால்கள் நான்கை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களால் இக்கால்களின் துணையுடன் நடந்து திரிகின்றமை முடியும்.
இந்த ரோபோக்களுக்கு புத்தகங்களை வாசிக்கின்றமைக்கும், பாடல்களுக்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைக்கின்றமைக்கும், கால்களை ஆட்டி நடனமாடுகின்றமைக்கும் முடியும்.
ஒவ்வொருவருக்கும் அழகான பெண்களின் முகம் ஒவ்வொன்று கொடுக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஆங்கில் ஆசிரியர்கள் ஏராளமானோர் தென்கொரியாவில் உள்ளனர்.
இவர்கள் ரிமோட் கொன்ரோல் மூலம் ரோபோக்களை இயக்குகின்றனர்.
கமராக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு ஆசிரியர்களின் முக பாவங்களை உள்வாங்கி ரோபோக்களில் வெளிப்படுத்துகின்றன.
பாடம் கற்பித்துக் கொடுக்கின்றமை மட்டுமன்றி ஆசிரிய ரோபோக்கள் மாணவர்களுக்கு நடனம், விளையாட்டு ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
ஆசிரிய ரோபோக்களின் அறிமுகத்துக்கு முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
இதனால் கல்வி மீதான விருப்பம் இம்மாணவர்கள் மத்தியில் அதிக்ரிக்கும் என்று தென்கொரிய நிபுணர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment