Sunday, December 19, 2010

கிளி வாகனத்தில் அமர்ந்து திரியும் ஆஞ்சநேயர்!


கொலம்பியா நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பஞ்ச வர்ண கிளிகள் இரண்டும் குரங்கு ஒன்றும் வளர்க்கப்படுகின்றன. இக்கிளிகளிடம் இருந்து பிரிக்க முடியாத நண்பனாக குரங்கு உள்ளது. அத்துடன் கிளிகளும் குரங்கிடம்  அன்பு பாராட்டுகின்றது.


கிளிகளிடம் இருந்து குரங்கைப் பிரிக்க ஹோட்டல் ஊழியர்கள் ஏதேதோ
தந்திரங்கள் எல்லாம் செய்து பார்த்தார்கள். குரங்கின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். ஆனால் கிளிகளிடம் இருந்து குரங்கைப் பிரிக்கும் இவர்களின் முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன.


இக்கிளிகளின் மேல் குரங்கு சவாரி செய்வதும் வழக்கம். கிளிகள் பறக்கும்போது அவற்றின் மேல் இக்குரங்கு அமர்ந்து இருக்கும். தாவிச் செல்ல முடியாத அளவு உயர்ந்த மரங்களை எல்லாம் இப்பறவைகளின் மேல் ஜாலியாக அமர்ந்து இருந்தபடியே சென்று அடையும்.

No comments:

பக்கங்கள்