இறந்து விட்டார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த 88 வயது மூதாட்டி ஒருவர் உயிருடன் மீண்ட அதிசயம் பிறேசில் நாட்டில் நிகழ்ந்து உள்ளது.
இவரின் பெயர் Maria das Dores da Conceicao. சில நாட்களுக்கு முன் உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் நோய் காரணமாக சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் இவர் இறந்து விட்டார் என்று வைத்தியர்கள் அறிவித்தனர். உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
உறவினர்களும் செத்த வீடு நடத்தினர். பிரேதப் பெட்டிக்குள் சடலம் வைக்கப்பட்டது. சவக்குழிக்குள் பிரேதத்தை வைக்க சில மணி நேரங்களே இருந்தன.
இந்நிலையில் மூதாட்டிக்கு திடீர் என்று சுவாசம் வந்து விட்டது.
உடலை அசைத்துக் கொண்டார்.
பிரேதப் பெட்டியை புதைக்க தயாராக இருந்த வேலையாட்கள் வித்தியாசத்தை விளங்கிக்கொண்டனர். இவரை வெளியில் எடுத்து உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவர் தேறி வருகின்றார்.
மரணச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
No comments:
Post a Comment