Thursday, December 23, 2010

நான்கு மனைவியர் தாக்கி கணவன் மரணம்!


பங்காளதேஷ் நாட்டைச் சேர்ந்த 46 வயது ஓட்டோ சாரதி ஒருவர் நான்கு மனைவிமாரால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்.

பல தார மணம் செய்து இருக்கின்றார் என்பதை இவர் மறைத்து வைத்திருந்தார்..

இவர் கிராமத்தில் நடந்த கேளிக்கை நிகழ்வு ஒன்றுக்கு இரு மனைவிமாருடன் சென்று இருக்கின்றார். அங்கு எதிர்பாராத விதமாக மூன்றாவது மனைவியை சந்திக்க நேர்ந்தது.

இவருக்கு நான்காவது மனைவி உண்டு என்கிற விடயத்தை மூன்றாவது மனைவி சொல்லிக் கொடுத்தார்.


மூன்று மனைவிமாரும் கணவனை அழைத்துக் கொண்டு நான்காவது மனைவியிடம் சென்றனர்.

அங்கு நான்கு பேரும் சேர்ந்த கணவனை நன்றாக நையப் புடைத்தனர். கணவன் இறந்து விட்டார்.

1 comment:

Anonymous said...

காபி, பேப்பர், வடை .... பதிவு அருமை

ஒன்றை வைத்தாலே , பல ஆண்கள் அனுபவிக்கனும். நாலை வைத்தால் இது தான் பாடு......

பக்கங்கள்