சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ரோபோக்கள்தான் வேலை பார்க்கின்றன.
வரவேற்பாளர்களாக, ஆடல்-பாடல் கலைஞர்களாக, உணவு, சிற்றுண்டி ஆகியவற்றைப் பரிமாறும் சிப்பந்திகளாக கடமை ஆற்றுகின்றன.
இலத்திரனியல் ஒலி மூலம் நல்வரவு கூறுகின்றன. உணவு, சிற்றுண்டி ஆகியவற்றை முக மலர்ச்சியுடன் பரிமாறுகின்றன. இவர்கள் வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளால் ஒருபோதும் பொறுமை இழந்து விட மாட்டார்கள். அதே போல் வாடிக்கையாளர்கள் ரிப்ஸ் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
வடக்கு சாண்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் என்கிற இடத்தில் கடந்த மாதம் திறக்கப்பட்டிருக்கின்றது இந்த உணவகம். Dalu Robot உணவகம் என்பது இதன் பெயர்.
இங்கு 12 ரோபோக்கள் தற்போது கடமையாற்றுகின்றன. ரோபோக்களின் சேவையை பெறுகின்றமைக்காக சனம் இங்கு கூடுகின்றது. மனிதர்களைக் காட்டிலும் ரோபோக்கள் நல்ல சேவையை வழங்குகின்றன என்று வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
வரும் மாதங்களில் 30 ரோபோக்கள் வரை சேவையாற்றும் என்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோபோக்களின் திறன்கள் விருத்தி செய்யப்படும் என்றும் உணவகத்தின் உரிமையாளர் கூறுகின்றார்.
No comments:
Post a Comment