Wednesday, December 22, 2010

130 குழந்தைகளின் தாய்!


இடுப்புகளுக்கு கீழ் கால்கள் இல்லாத சீனப் பெண் ஒருவர் 130 அநாதைச் சிறுவர்களைப் பராமரித்து வருகின்றார்.

இவருக்கு வயது 55. 12 வயதாக இருக்கும்போது புகையிரத விபத்து ஒன்றில் இடுப்புக்கு கீழ் கால்களை இழந்து விட்டார்.

இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். 17 வயது முதல் அநாதை இல்லம் ஒன்றிலேயே வளர்ந்தவர்.


இந்நிலையில் கடந்த 37 வருடங்களாக குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கின்றார். 130 குழந்தைகளும் இவரை அம்மா என்றே அழைக்கின்றார்கள்.


இவர் மரத்தால் ஆன குற்றிகளை பயன்படுத்தி நடப்பார். இது வரை 40 குற்றிகளைப் பயன்படுத்தி உள்ளார். அதிக தூரங்கள் செல்ல வேண்டுமாயின் வேண்டியவர்களின் முதுகில் ஏறிச் செல்வார்.

No comments:

பக்கங்கள்