இவர் நத்தார் பண்டிகையை கடந்த 17 வருடங்களாக தவறாது கொண்டாடி வருகின்றார். 6000 தடவைகள் நத்தார் இராப் போசனம் சாப்பிட்டு இருக்கின்றார். மிஸ்ரர் கிறிஸ்மஸ் என்று அழைக்கப்படுகின்றார்.
விவகாரத்துப் பெற்றவர்.
உலகில் எல்லாவற்றைக் காட்டிலும் கிறிஸ்மஸ் மரத்தின் மீதுதான் இவருக்கு அதிக ஆசை.
எனவேதான் இம்முறை கிறிஸ்மஸ் மரத்தை திருமணம் செய்ய தீர்மானித்து உள்ளார்.
திருமண மோதிரத்தையும் தயார் செய்து விட்டார். மரத்தின் எந்தக் கிளையில் மோதிரத்தை அணியலாம்? என்று யோசித்து வருகின்றார்.
திருமணத்தை நடத்தி வைக்க பாதிரியார் ஒருவரை ஒழுங்கு செய்ய வேண்டி இருக்கின்றமைதான் ஒரே ஒரு பிரச்சினை என்கின்றார்.
பிளாஸ்ரிக்கில் ஆன கிறிஸ்மஸ் மரம் ஒன்றுதான் கடந்த இரு வருடங்களாக இவரிடம் உள்ளது. இவரின் நெருங்கிய நண்பனும் அதுதான். இக்கிறிஸ்மஸ் மரத்தை பார்க்கப் பார்க்க சலிக்காது என்கின்றார்.
வளர்ப்புப் பிராணிகளை திருமணம் செய்தவர்கள் குறித்து அறிந்து வைத்திருக்கின்றார். இந்நிலையிலேயே கிறிஸ்மஸ் மரத்தை திருமணம் செய்கின்றார்.
No comments:
Post a Comment