Tuesday, December 21, 2010

வைத்தியரின் தவறால் ஆணுறுப்பை இழந்தவர்!


டுபாயில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றில் சத்திர சிகிச்சை செய்யச் சென்ற ஆண் ஒருவர் பிறப்புறுப்பை இழக்க நேரிட்டு உள்ளது. இவருக்கு ஆணுறுப்பில் வேறு ஒரு பிரச்சினை. அப்பிரச்சினைக்குரிய சத்திர சிகிச்சைக்குதான் சென்று இருக்கின்றார்.

இவருக்கு ஜேர்மன் வைத்தியர் ஒருவர் சத்திர சிகிச்சை செய்தார். தவறுதலாக ஆண் உறுப்பை அறுத்து விட்டார்.

ஆண் உறுப்பை இழந்தவர் மருத்துவ நிலையத்துக்கு எதிராக வழக்குப் போட்டார். மருத்துவ நிலையமோ பழியை ஜேர்மன் வைத்தியர் மீது போட்டது.

ஒரு மில்லியன் டிராம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கீழ் நிலை நீதிமன்றம் மருத்துவ நிலையத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்நஷ்டஈடு போதாது என இவர் மேல் நிலை நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். 1.2 மில்லியன் டிராம் நஷ்டஈடு வழங்க இந்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக உயர் சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. ஜேர்மனிய வைத்தியரின் தனிப்பட்ட தவறுக்காக இவ்வளவு தொகையை நஷ்டஈடாக வழங்க முடியாது என்றது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நஷ்டஈட்டுத் தொகையை குறைக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

No comments:

பக்கங்கள்