இன்று நத்தார் தினம். உலகம் பூராவும் கடந்த ஒரு வாரமாக கொண்டாட்டம். தாய்லாந்தில் நத்தார் தாத்தாக்களாக யானைகள் வலம் வந்தன. இவை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா அழைத்து வரப்பட்டன. சாகசங்கள் பலவற்றைச் செய்து மகிழ்வித்தன. அத்துடன் பரிசுப் பொருட்களை தும்பிக்கையால் சிறுவர்களுக்கு வழங்கின.
இந்நிகழ்வு Ayutthaya மாவட்டத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. சிறுவர்கள் பேரணி திரண்டு யானைகளின் சாகசங்களை கண்டு களித்தனர்.
No comments:
Post a Comment