தன்னினச் சேர்க்கையாளரான தந்தை ஒருவரின் பாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றுக்கு தாய்லாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆணும் அற்ற, பெண்ணும் அற்ற ஒரு தந்தை. அவருக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும். இரு பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பால் அடையாளம் தொடர்பாக சந்தேகம் எழுகின்றது. பாலியல் தொழிலில் இருவரும் ஈடுபடுகின்றனர். - இதுதான் படம்.
தகப்பனை படுகொலை செய்கின்றமை போல் மகன் கனவு காண்கின்ற காட்சியும் படத்தில் வருகின்றது.
இப்படம் தாய்லாந்தின் திரைப்பட சபை முன்பாக அனுமதிக்கு சென்றது. சபையின் உறுப்பினர்கள் 23 பேரில் 13 பேர் இத்திரைப்படம் காண்பிக்கப்படக் கூடாது என்று வாக்களித்து உள்ளார்கள். மூவர் மாத்திரம் இத்திரைப்படம் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என்று வாக்களித்து உள்ளனர்.
இப்படம் ஒழுக்கத்துக்கு புறம்பான விடயங்கள், பாலியல் காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தடைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
மகனின் கனவுக் காட்சி வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tanwarin Sukkhapisit என்கிற இயக்குனர் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் ஒரு பெண். இவர்தான் படத்தில் தந்தை வேடத்தில் நடித்து உள்ளார்.
சபையின் தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து உள்ளது என்கின்றார். பாலியல் காட்சிகள் கதையோடு சேர்ந்தனவாக இருப்பதால் அக்காட்சிகளை தவிர்க்க முடியாது என்கின்றார்.
ஆயினும் திரைப்பட இயக்குனர் இத்தடைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்.
இச்சபை கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இத்திரைப்படத்தின் சீ.டிகளை விற்பனை செய்பவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று கலாசார அமைச்சர் எச்சரித்து உள்ளார்.
No comments:
Post a Comment