சீனாவின் புராதான இராசதானிகளில் ஒன்றாக இருந்த ஸாஆங்ஸி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாண வேலை ஒன்றின்போது 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சூப் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த பாத்திரம் ஒன்றை வெளியில் எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் சூப் இருந்தது.
மிருகம் ஒன்றின் எலும்புகளில் சூப் ஆக்கப்பட்டு இருக்கின்றது.
இப்பாத்திரத்துடன் இன்னும் இரு பாத்திரங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்றுக்குள் ஒரு வகையான மதுபானம் உள்ளது.
சூப் தயாரிக்கின்றமைக்குப் பயன்படுத்தப்பட்ட மிருகம் எது? மது பானம் எதில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது? என்கிற ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment