Tuesday, December 21, 2010

நோயாளி அப்பாவைப் பராமரிக்கும் 03 வயதுச் சிறுமி!


பாரிசவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 26 வயதுத் தந்தைக்கு தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் மனம் கோணாமல் செய்கின்றார் சீன நாட்டைச் சேர்ந்த இந்த மூன்று வயதுக் குழந்தை. இவரின் பெயர் Dong Xinyi. 2007 ஆம் ஆண்டு பிறந்தவர். Shandong மாகாணத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை வீதி விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் பாரிசவாதம் ஏற்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டை விட்டு வெளியேறினார்.


ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் சிறுமியை மீண்டும் தகப்பனிடம் கொண்டு வந்து சேர்த்தார் தாய். அன்று முதல் இச்சிறுமிதான் தகப்பனை பராமரிக்கின்றார். தகப்பனுக்கு சமைத்துக் கொடுக்கின்றார். கழிவகற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றார். தனியாக எல்லா வேலைகளையுமே செய்கின்றார். இருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.




No comments:

பக்கங்கள்