Monday, December 27, 2010

கலியாண வீட்டில் காணாமல் போன மாப்பிள்ளை!


திருமண நாள் அன்று எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன சீன இளைஞன் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த மே மாதம் 01 ஆம் திகதி Tian என்கிற இளைஞனுக்கும், தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணத்துக்கு ஏற்பாடாகி இருந்தது.

ஆனால் அன்றைய தினம் எவரும் எதிர்பார்த்து இராத வகையில் மணமகன் தலைமறைவாகி விட்டார்.

மணமகளுக்கும், பெண் வீட்டாருக்கும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கும் இது பேரதிர்ச்சியை கொடுத்தது.

மணமகன் ஏன் ஓடி மறைந்தார்? என்று மண்டையை போட்டுக் குழப்பினார் மணமகள்.

எனவே மணமகனைக் கண்டு பிடித்து ஏன் ஓடிப் போனார்? என்று கேட்க மணமகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்.

ஊடகங்கள், இணையத் தளங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மணமகனைத் தேடினார்.

மணமகனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 800,000 யுவான் வரை பணப் பரிசு தருவார் என்று அறிவித்தார்.

மணமகளின் பகீரத தேடுதல் முய்ற்சிகளை அடுத்து இளைஞன் ஒருவாறு வெளிப்பட்டார்.

சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்தமைக்கு முதலில் மன்னிப்புக் கோரினார்.

ஆனால் ஓடி ஒளிந்தமைக்கு இவர் சொன்ன காரணம்தான் எல்லோருக்கும் வியப்பை கொடுத்தது.

"பணக்கார பெண்ணை திருமணம் செய்கின்றபோது வாழ்க்கையின் நிம்மதி தொலைந்து விடும். நான் நிம்மதியை இழக்க விரும்பவில்லை. ஆகவேதான் ஓடி மறைந்தேன். "

இவ்வாறு இந்த இளைஞன் தெரிவித்தார்.

No comments:

பக்கங்கள்