Tuesday, December 21, 2010

பிலிப்பைன்ஸ் பட்டதாரி மாணவர்கள் நிர்வாணப் போர்!


பிலிப்பைன்ஸ் நாட்டுப் பட்டதாரி மாணவர்கள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இம்மாதத்தில் இரு தடவைகள் இப்போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர். மனிலா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆம் திகதி இப்போராட்டம் இடம்பெற்றது.

 suburban பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது. இது பிலிப்பைன்ஸில் பாரம்பரியம் பாரம்பரியமாக வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம். ஏதாவது ஒரு முக்கியமான அல்லது சர்ச்சைக்குரிய விடயம ஒன்றை வெளிப்படுத்தும் வகையில் இப்போராட்டம் இருக்கும். ஆண் மாணவர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு பிறந்த மேனியாக வரிசையில் நின்றனர். 

பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஓடினார்கள். உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டப்பட்டு உள்ளது. இதனால்உயர்கல்வியின் தராதரம் வீழ்ச்சி அடையலாம் என்றும் கல்விச் செலவினங்கள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை அமைந்தன.









No comments:

பக்கங்கள்