Sunday, December 26, 2010

பாலியல் ஆலோசனை நிலையத்துக்கு மூடு விழா!


சீனாவின் சங்கை நகரத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த பாலியல் ஆலோசனைகளுக்கான இலவச கல்வி நிலையத்துக்கு கடந்த வாரம் மூடு விழா நடத்தப்பட்டது.

அந்நாட்டு சுகாதார அமைச்சின் கீழ் இக்கல்வி நிலையம் செயல்பட்டு வந்தது.

15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் பிள்ளைகளுக்கு இலவச பாலியல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள், ஆண் உறைகள் ஆகியவற்றை இந்நிலையம் வழங்கி வந்தது.

ஆனாலும் பெரிய அளவில் இந்நிலையத்துக்கு இளம் பிள்ளைகளிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையத்தில் ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும் செயல்பட நியமிக்கப்பட்டிருப்பவர்கள் துறை சார்ந்த நிபுணர்கள்தான். ஆனால் அன்னியர்களுடன் பாலியல் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள இளம் பிள்ளைகள் விருப்பம் காட்டவில்லை.

மாறாக இணையத் தளங்கள் மூலமாக தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

இந்நிலையிலேயே இந்நிலையம் மூடப்பட்டு விட்டது.

No comments:

பக்கங்கள்