Friday, December 24, 2010

1022 சொற்களை அறிந்து வைத்திருக்கும் நாய்!


1022 சொற்களை அறிந்து வைத்திருக்கின்றது  Chaser என்கிற பெண் நாய். இது Border Collie என்கிற உயர் ஜாதி இனத்தைச் சேர்ந்தது. இந்த இன நாய்கள் மிகவும் புத்திக் கூர்மை உடையவை.

உலகில் அதிக சொற்களை தெரிந்து வைத்திருக்கும் பிராணி Chaserதான்.

இச்சொற்களுக்கு உரிய பொருட்களை அடையாளம் காணவும், பொருட்களை பயன்பாட்டுக்கு அமைய வகைப்படுத்தவும் இந்நாய்க்கு முடியும்.

அதாவது மூன்று வயது குழந்தைக்கு உரிய அறிவுடன் இது செயல்படுகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஜேர்மனிய நாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் இந்நாய்க்கு 200 சொற்களை முதலில் சொல்லிக் கொடுத்தார்.

இந்ந்லையில்  Border Collie உயர் ஜாதி ரக நாய்கள் சொற்களை தெரிந்து கொள்வதில் ஏதேனும் மட்டுப்பாடுகள் உண்டா? என்கிற ஆய்வில் அமெரிக்காவின் Wofford கல்லூரி நிபுணர்கள் இருவர் இறங்கினர்.

மூன்று வருடங்கள் Chaser இற்கு பயிற்சிகள் கொடுத்தனர். 838 சோதனைகளில் இந்நாய் இது வரை தேறி உள்ளது. 

No comments:

பக்கங்கள்