Sunday, December 26, 2010

ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் விவாகரத்து!


சவூதி அரேபியாவில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குறும் தகவல் ஒன்று விவாகரத்துப் பெற்றுக் கொடுத்துள்ளது.

மனைவியுடன் கணவன் வாக்குவாதப்பட்டு இருக்கின்றான்.

பின் மனைவிக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி இருந்தான். விவாகரத்துப் பெற்றுக் கொண்டான் என்று அதில் குறிப்பிட்டு இருந்தான்.

இந்த எஸ்.எம்.எஸ் மூலமாக கணவன் விவாகரத்து தந்து விட்டார் என்று மனைவி விடாப்பிடியாக நின்று கொண்டார். விவாகரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றில் வழக்குப் போட்டார்.


மனைவி மீது ஏற்பட்டிருந்த கோபத்தில்தான் அப்படி ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார் என்றும் உண்மையில் விவாகரத்து வழங்கி இருக்கவில்லை என்றும் நீதிமன்றில் வாதாடினார்.

ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் தகவல் மூலம் மனைவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டு இருக்கின்றது என்கிற முடிவுக்கு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் நீதிமன்றம் வந்துள்ளது.

No comments:

பக்கங்கள்