Thursday, December 23, 2010

மீன்களால் பரவும் எயிட்ஸ்!


தோல்களை சுத்தம் செய்கின்றமைக்கு மீன்களை பயன்படுத்தும்ல் fish pedicures என்று சொல்லப்படுகின்ற  சிகிச்சை முறையால் எயிட்ஸ் பரவும் ஆபத்து உண்டு என்று டுபாய் நாட்டு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பெண்கள் மாத்திரம் அன்றி ஆண்களும் இம்முறையில் சிகிச்சை பெறுகின்றனர். 

ஆனால் இம்முறையால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்பட்டு விடும் என்றும் குறிப்பாக எச்.ஐ.வி தொற்று உட்பட வைரஸ் தொற்றுக்கள் பல பரவுகின்ற பேராபத்து இருக்கின்றது என்றும் டுபாய் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்து உள்ளார்.

பயனாளிகளுக்கு இருக்கின்ற நோய்கள் மீன்கள் மூலமாகவும் சரி, இம்மீன்கள் வாழும் நீர் மூலமாகவும் சரி வேறு பயனாளிகளுக்கு ஏற்படக் கூடும் என்று அவர் விளக்கம் தந்து உள்ளார்.



துருக்கி நாட்டில்தான் fish pedicures  முறை வளர்ச்சி பெற்றது. garra rufa, chin chin என்கிற பெயருடைய சிறிய மீன்கள் இச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இம்மீன்கள் தோல்களில் உள்ள இறந்த கலங்களை தின்று விடும். 

அழகு நிலையங்களில் இச்சிகிச்சை முறை பிரபலம் கண்டு வருகின்றது. குறிப்பாக பாதங்களை சுத்தம் செய்ய இம்முறை கையாளப்படுகின்றது.


 fish pedicures சிகிச்சை முறை அமெரிக்காவில் 14 மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

பக்கங்கள்