தாய்வானில் 83 வயது முதியவர் ஒருவர் பார்கின்சன் நோயால் அவலப்பட்டுக் கொண்டிருந்த 80 வயது மனைவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணைக் கொலை செய்து உள்ளார்.
இவரின் பெயர் Wang Ching-hsi. ஓய்வு பெற்ற பொறியியலாளர்.
மனைவியை கருணைக் கொலை செய்யப் போகின்றார் என்று இவர் ஏற்கனவே சொந்த இணையத் தளத்தில் விளக்கமாக எழுதி இருந்தார்.
மனைவிக்கு நித்திரை குளுசைகள் கொடுத்தார். பின்னர் ஸ்கூட் ரைவர் கருவியை மண்டை ஓட்டின் மேல் வைத்து சுத்தியலால் அறைந்து இருக்கின்றார்.
பொலிஸில் இவர் சுயமாகவே சரண் அடைந்து உள்ளார்.
இத்தம்பதிக்கு இரு புதல்வர்கள். பிள்ளைகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர். இவர்தான் மனைவியை பராமரித்து வந்திருக்கின்றார். இவரின் மனைவிக்கு காலில் முறிவும் உண்டு.
முதிய வயதில் நோய்களால் வருந்துகின்றமையை இத்தம்பதி விரும்பி இருக்கவில்லை.
ஒன்றாக தற்கொலை செய்கின்றமை குறித்துக்கூட இருவரும் ஆலோசித்து வந்திருக்கின்றனர்.
Wang Ching-hsi இணையத்தில் பல சந்தர்ப்பங்களில் இவை குறித்து எல்லாம் எழுதி வந்திருக்கின்றார்.
" நாங்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தோம். இவ்வாழ்க்கை போதுமானது. உயிரை மாய்க்கின்றமை குறித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இருவரும் கலந்தாலோசித்து இருக்கின்றோம். எனக்கு முன் அவர் இறப்பாரானால் அது அவரின் அதிஷ்டம் என்றுதான் கூற முடியும். தேவை ஏற்பட்டால் கருவி ஒன்றின் மூலம் மண்டை ஓட்டை துளைப்பேன். "
இவ்வாறு கடந்த 05 ஆம் திகதி இணையத்தில் எழுதி இருந்தார்.
தாய்வானில் கருணைக் கொலை ஒரு குற்றச் செயலாகும். என இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment