Wednesday, December 22, 2010
60 யுவதிகளை கலியாணம் செய்து சோரத்துக்கு விற்றவர்!
குறைந்தது 60 யுவதிகளை திருமணம் செய்து அவர்களை எல்லாம் விபச்சார விடுதிகளுக்கு விற்பனை செய்த இந்தியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்திருக்கின்றது. டர்ஜீலிங் மாநிலம். இங்கு அழகான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களும் அழகானவர்கள். ஆனால் வறியவர்கள்.
இவர்களின் அழகையும், வறுமையையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் இதே மாநிலத்தைச் சேர்ந்த Bikky Biswarkarma 27 வயது இளைஞன். இவர் அதிகம் சம்பாதிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவரைப் போல் கடந்த ஐந்து வருடங்களாக நடித்து வந்திருக்கின்றார்.
திருமணம் செய்கின்றமைக்காக விடுமுறையில் வந்திருப்பவரைப் போல் காட்டிக் கொள்வார். இது வரை குறைந்தது 60 யுவதிகளை ஏமாற்றித் திருமணம் செய்து மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு விற்பனை செய்து உள்ளார். 70,000 இந்திய ரூபாய் முதல் 100,000 ரூபாய் வரை ஒரு யுவதியின் விலை.
இவர் மிகவும் தந்திரமான வகையில் யுவதிகளை விற்று வந்துள்ளார். உறவினர் ஒருவரை சந்திக்க வேண்டி உள்ளது என்று சொல்லி இந்த யுவதிகளை புகையிரதத்தில் அனுப்பி வைப்பார். அங்கு விபச்சார விடுதியின் உரிமையாளர் ஒருவர் உறவினரைப் போல் புகையிரத நிலையத்தில் காத்திருப்பார். கூட்டிச் செல்வார்.
இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றமை பொலிஸாருக்கு மிகவும் கடினமான சவாலாக இருந்து வந்தது. ஏனெனில் இந்த யுவதிகளுக்கு என்ன நடந்தது? என்கிற உண்மை பெற்றோருக்கு தெரியாது.
ஆனால் இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது யுவதிகள் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளார்கள்.
மனிதக் கடத்தல்களில் ஈடுபட்டமை உட்பட கடுமையான பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டு உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment