Thursday, December 23, 2010

அமெரிக்கரின் காதுக்குள் இருந்த முத்து!



கடந்த 41 வருடங்களாக ஒரு அமெரிக்கரின் காது ஒன்றுக்குள் முத்து ஒன்று இருந்து வந்துள்ளது.

இம்மனிதரின் பெயர் கல்வின் பிரைட். வயது-46.

இவருக்கு 05 வயது இருக்கும்போது சகோதரியுடன் விளையாடி இருக்கின்றார்.  தாயின் மாலையில் இருந்த முத்து ஒன்றை எடுத்து விளையாட்டாகவோ, தவறுதலாகவோ இவரின் காது ஒன்றுக்குள் இச்சகோதரி புகுத்தி விட்டார். இருவரும் பின்னர் மறந்து போய் விட்டார்கள்.

அன்றில் இருந்து இவருக்கு காதுப் பிரச்சினை. எத்தனையோ வைத்தியர்கள், தாதிமார் பரிசோதனைகள் நடத்தி சிகிச்சைகள் வழங்கியபோதிலும் வருத்தம்உரமானதே தவிர குறையவே இல்லை.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன் Athens-Georgia பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருக்கின்றார்.

கழுகுக் கண்களை உடைய தாதி ஒருவர் இவரின் காதை பரிசோதித்தார். காதுக்குள் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றமையை கண்டு கொண்டார். 

அதை வெளியில் எடுக்க முயன்றார். அது ஒரு கடினத் தன்மை உடைய பொருளாக இருந்தது. இறுகிக் காணப்பட்டது. இது ஒரு முத்தாக இருக்கலாம் என்றுகூட அந்த தாதி சொல்லி இருக்கின்றார். 

முத்து வெளியில் எடுக்கப்பட்டது. நோயாளி குணம் அடைந்து விட்டார்.

ஆனால் அதிசயம் என்னவென்றால் இவருக்கு காது கேட்கும் தன்மையில் குறைபாடு எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை.

No comments:

பக்கங்கள்