சிங்கப்பூர் விமானம் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கதவுகளைத் திறக்க முயன்று இருக்கின்றார் அயர்லாந்து நாட்டவரான பெண் பயணி ஒருவர்.
விமானம் சிங்கப்பூரில் தரை இறங்குகின்றமைக்கு ஒரு மணித்தியாலங்கள் இருந்த நிலையில் இவர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
SQ327 என்கிற விமானத்தில் கடந்த மாதம் 30 ஆம் திகதி அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றது. Diana Mary Scanlon என்கிற பயணியே இந்நடவடிக்கையில் ஈடுபட்டவர் ஆவார்.
இவருக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விமானத்தினது, பயணிகளினதும் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் 5000 அமெரிக்க டொலர் வரை இவர் நட்டஈடு செலுத்த வேண்டும்.
நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டபோது அழுது இருக்கின்றார். இவரை மன நல காப்பகத்தில் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை இடம்பெறும்.
No comments:
Post a Comment