Sunday, December 26, 2010

75 வயது முதியவருக்கு 20 வயது மனைவி வேண்டுமாம்!


75 வயதில் சீன முதியவர் ஒருவருக்கு திருமண ஆசை வந்துள்ளது.

அதுவும் திருமணப் பெண்ணுக்கு 20 வயதுவரை இருந்தால் நல்லதாம். 45 வயது வரையான பெண்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பாராம். அந்நாட்டு ஊடகங்கள் மூலமாக மணப் பெண்ணை தேடி வருகின்றார்.

இம்முதியவரின் பெயர் Sun Tianmin. ஓய்வு பெற்ற பொறியலாளர்.

நோபால் பரிசு பெற்ற சீன விஞ்ஞானி  Franklin Yang Chen-Ning 88 வயதில் Weng Fan என்கிற 28 வயது யுவதியை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அப்படி இருக்கும்போது 75 வயதில் ஏன் திருமணம் செய்யக் கூடாது? என்பது இம்முதியவரின் வினா.

பல நிபந்தனைகளைப் போடுகின்றார்.

மணப் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாம். உயர் படிப்பு இருக்க வேண்டுமாம்.மணப் பெண்ணுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் நிச்சயம் இவர்களுடன் தங்கி இருக்க முடியாதாம். திருமணத்துக்கு பின்னர் சூதாட்டம், மதுப் பாவனை, நடனமாட செல்லுதல் போன்ற பழக்கங்கள் இருக்கவே கூடாதாம்.

விவாகரத்து பெற மாட்டார்கள் என்று இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாம்.

இம்முதியவர் ஒரு பட்டதாரியும்கூட. 3,000 யுவான் வரை ஓய்வூதியம் பெறுகின்றார். ஏற்கனவே திருமணம் ஆகி 1998 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றவர். அன்று முதல் பெண் வாடையே இல்லாமல் தனியாக வாழுகின்றார் என்று கூறுகின்றார். 

No comments:

பக்கங்கள்