குறைந்தது ஒரு வாரத்தில் இரு தடவைகள் உடல் உறவு கொள்கின்றமை ஆண்கள் ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உதவும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட நீண்ட கால ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு அறியப்பட்டு உள்ளது.
வாரத்தில் இரு தடவைகளேனும் உறவு வைத்துக் கொள்கின்றமை ஆண்களை இதய நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வாளர்கள் 1,000 இற்கும் அதிகமான ஆண்களை பரிசோதித்த பிற்பாடே இம்முடிவுக்கு வந்தனர். ஆனால் பெண்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கவில்லை.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்கள் 40 வயதுக்கும் 70 வயதுக்கும் உட்பட்டவர்கள். 16 வருடங்கள் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் பாலுறவு கொள்கின்றமை குறித்து வினவி அறியப்பட்டது. பின் இதய நோய்க்கான அறிகுறிகளை கொண்டிருக்கின்றமை குறித்து பரிசோதிக்கப்பட்டனர்.
வயது, நிறை, இரத்த அழுத்தம், கொலஸ்ரோலின் அளவு ஆகியனவும் கருத்தில் கொள்ளப்பட்டன.
மாதத்தில் ஒரு தடவை அல்லது அதற்கும் குறைவாக உடலுறவு கொண்டவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது வாரத்தில் இரு தடவையேனும் உடலுறவு கொண்டவர்கள் இதய நோயால் பீடிக்கப்படாதவர்களாக இருந்தனர்.
உடலில் பௌதீக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் செக்ஸ் ஏற்படுத்துகின்ற தாக்கம் ஆரோக்கியத்தை பேணுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment