நத்தார் தாத்தாவை நம் வாசகர்கள் அனைவருமே நிச்சயம் அறிவீர்கள்.
அவரின் தோற்றம்கூட உங்கள் கண்களுக்கு மிகவும் பரிச்சயமானதே.
ஆனால் ஆணுறைகளை ஆடையாக அணிந்து கொண்டு நத்தார் தாத்தா உங்கள் முன் தோன்றி இருக்கின்றாரா?
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அமைந்து உள்ளது Cabbages and Condoms என்கிற உணவகம்.
பாதுகாப்பான செக்ஸ், ஆரோக்கியமான உணவு ஆகிய இரண்டும் இவ்வுணவகத்தின் தாரக மந்திரங்கள்.
ஆண் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கருத்தடை அறுவைச் சிகிச்சையை செய்து கொடுக்கின்ற ஒரே ஒரு உணவகம் இதுவே ஆகும்.
உணவகத்தோடு இணைந்தததாக சத்திர சிகிச்சைக்கூடமும் அமைந்து உள்ளது.
இந்நிலையில் இவ்வுணவகம் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பெரிதும் விரும்பிச் செல்கின்ற ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகின்றது.
பாதுகாப்பான உடலுறவின் முக்கியத்தை வலியுறுத்தும் வகையில் கடந்த நத்தார் பண்டிகையின்போது ஆணுறைகளை ஆடையாக அணிந்த நத்தார் தாத்தாவை இவ்வுணவகம் அறிமுகம் செய்து வைத்து உள்ளது.
No comments:
Post a Comment