Monday, January 17, 2011

பெண்களின் பிறப்புறுப்புக்கு மருத்துவ குளியல்!

chai-yok என்பது கொரிய நாட்டு பாரம்பரிய நீராவிக் குளியல்.

பல நூற்றாண்டுகளாக அந்நாட்டில் நின்று நிலவி வருகின்ற ஒரு மருத்துவ குளியல்.

அதுவும் பெண்களுக்கான குளியல்.

இன்னும் தெளிவாக சொன்னால் பெண்களில் பிறப்பு உறுப்புக்கான பிரத்தியேக குளியல் சிகிச்சை இது.

பெண் உறுப்பு பிரதேசத்துக்கான இக்குளியல் சிகிச்சை உடலுக்கு ஆரோக்கியமானது, சுகாதாரமானது, சிறப்பானது என்பது கொரிய நாட்டவரின் நம்பிக்கை.


இக்குளியல் மன அழுத்தத்தை குறைக்கின்றதாம். தொற்றுக்களுக்கு எதிராக போராடும் சக்தியைக் கொடுக்கின்றதாம். விசேடமாக மாத விலக்குச் சக்கரச் செயல்பாட்டை ஒழுங்காக்குகின்றதாம். இன்னும் பல மருத்துவ நன்மைகள் உண்டு என்று நம்பப்படுகின்றது.

ஆனால் நவீன மருத்துவ விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுகின்றது. இக்குளியலை ஒரு சிகிச்சையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது. குறிப்பாக இக்குளியல் முறையால் மருத்துவ நன்மைகள் உண்டு என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று அடித்துக் கூறுகின்றது.

நீராவி ஒரு வேளை உள ரீதியான நன்மைகளை இப்பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்று சில சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் கொரிய நாட்டுப் பெண்கள் மத்தியில் இன்றும் இச்சிகிச்சை முறை உயிரோடுதான் வழ்கின்றது.

குறிப்பாக மாத விலக்கு முடிந்த கையோடு கொரிய பெண்கள் இக்குளியல் சிகிச்சையை வீட்டில் வழமையாக பெறுகின்றனர்.


கொதிக்கும் நீர் உள்ள பாத்திரம் கீழே வைக்கப்படும். அப்பாத்திரத்தில் இருந்து எழுகின்ற நீராவியை நேரடியாக உள்வாங்கக் கூடிய வகையில் நிர்வாணமாக தளபாடம் ஒன்றில் பெண் அமர்ந்து இருப்பார். பெண்ணின் உடல் முழுவதுக்கும் நீராவி உள்வாங்கப்படும். நீரில் மருத்துவ மூலிகைகள் கலக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

செக்ஸை வேண்டாம் என்று சொல்லும் பிரிட்டன் பெண்கள்!


பிரித்தானிய பெண்கள் செக்ஸை காட்டிலும் சொக்கலேட்டுக்களை பெரிதும் விரும்புகின்றனர் என்று அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்து உள்ளது.

இக்கருத்துக் கணிப்புக்காக 2000 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

வைன், செக்ஸ், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் சொக்கலேட்டுக்கள் மீது அதிகம் ஆசை வைத்து இருக்கின்றனர் என்று இந்த கணிப்பின் முடிவு கூறுகின்றது.

2.3 மில்லியன் பிரித்தானிய பெண்கள் சொக்கலேட்டுக்கள் மீது பேராவல் வைத்து இருக்கின்றார்கள் என்றும் பிரிட்டன் பெண்கள் குறைந்தது ஒரு நாளில் மூன்று தடவைகளேனும் சொக்கலேட்டுக்களை சாப்பிடுகின்றனர் என்றும் இந்த கணிப்பில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு நாளும் சொக்கலேட்டுக்களை பற்றியே அதிகம் யோசிக்கின்றனர் என்றும் 18 சதவீதம் ஆனோர் மாத்திரமே செக்ஸை பற்றி அதிகம் யோசிக்கின்றனர் என்றும் கணிப்பு கூறுகின்றது.

சொக்கலேட்டுக்களுக்கு முன்னால் செக்ஸுக்கு குட் பை சொல்லி விடுவார்கள் என்று ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

பிரிட்டன் ஆண்களும் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் பிரித்தானிய ஆண்களை பொறுத்த வரை எழுந்தமானமாக 10 பேரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 06 பேர் ஒவ்வொரு நாளும் செக்ஸ் பற்றியே அதிகம் சிந்திக்கின்றனர் என்றும் 11 சதவீதமானவர்கள் மாத்திரம் சொக்கலேட்டுக்கள் மீது அலாதிப் பிரியம் வைத்திருக்கின்றனர் என்றும் அறிய வந்துள்ளது.


நாய்க் காதலுக்கு சோதனை!



வளர்ப்பு நாய்கள் எதிர்ப்பால் துணையைத் தேடி அலையாமல் இருக்க அறிமுகம் ஆகி இருக்கின்றது நான்கு கால்கள் கொண்ட ஒரு வகையான பொம்மை.

நாய்களுக்கு இது ஒரு பொம்மை என்று தெரியவே தெரியாதாம்.

பார்த்தவுடன் காதல் வயப்பட்டு விடுமாம்.

இப்பொம்மை சிலிக்கனால் ஆக்கப்பட்டது.

நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்போருக்கு இது ஒரு வரப் பிரசாதம்.

விலை 150 டொலர் மாத்திரம்.


Sunday, January 16, 2011

இரு தலைகளுடன் ஒரு கன்றுக் குட்டி!


ஜோர்ஜியா நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் இரு தலைகளுடன் ஒரு கன்றுக் குட்டி பிறந்து உள்ளது.

கன்றுக் குட்டியின் இவ்வித்தியாசமான தோற்றத்தால் தாய்ப்பசு அச்சம் அடைந்து இருக்கின்றது.

பால் கொடுக்க மறுக்கின்றது.


இதனால் இக்கன்றுக் குட்டிக்கு புட்டியில் பால் ஊட்டப்படுகின்றது.

கன்றுக் குட்டி ஆரோக்கியமாக உள்ளது.

முன்னங்கால்களுடன் மாத்திரம் நடமாடும் அதிசய பன்றி!


சீனாவில் முன்னங்கால்களுடன் மாத்திரம் பிறந்த பன்றிக் குட்டி ஒன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஹீரோவாக உலா வருகின்றது.

இதற்கு பிறக்கும்போதே பின்னங்கால்கள் கிடையாது.

இதை கொன்று விடும்படி உரிமையாளருக்கு மற்றவர்கள் ஆலோசனை கூறி இருந்தனர்.


ஆயினும் இளகிய மனம் கொண்ட உரிமையாளர் இதை கொன்று விடவில்லை.

வளர்த்து வருகின்றார்.

பன்றிக் குட்டியும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகின்றது.

இதற்கு பின்னங்கால்கள் இல்லாதது ஒரு குறையே அல்ல. 

முன்னங்கால்களை மாத்திரம் பயன்படுத்தி அன்றாட வாழ்க்கையை சாதாரணமாகவே தொடர்கின்றது.

பிறந்து ஒரு மாதத்தின் பின் இரு கால்களையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அசைந்து பழகிய பன்றிக் குட்டி இப்போது அநாயாசமாகவே நடமாடுகின்றது.

இரு கால்களுடன் மாத்திரம் விலங்கு ஒன்று நடந்து திரிவது என்பது உண்மையில் மிகவும் கடினமான விடயம்.


இந்நிலையில் இப்பன்றியை காண மக்கள் கூட்டம் சமுத்திரமாக அன்றாடம் திரண்டு வருகின்றது.

இப்பன்றியின் பெயர் நம்பிக்கை என்பது. மனித குலத்துக்கு இது ஒரு வழிகாட்டி போலும்.

Saturday, January 15, 2011

இந்தியாவில் வேற்று கிரகவாசிகளின் சாயலில் குழந்தை!


இந்தியாவை சேர்ந்த தாய் ஒருவருக்கு வேற்றுக் கிரகவாசிகளின் சாயலில் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.

குஜராத்தை சேர்ந்த சொனால் வக்ஹெலா என்பவரே இக்குழந்தையை பிரசவித்தவர் ஆவார்.

குழந்தையின் தலை மாத்திரம் 2.15 கிலோ கிராம். குழந்தையின் தலை ஊதப்பட்ட ஒரு பலூனைப் போல் வீங்கிக் காணப்படுகின்றது.

மூளைக்குள் தண்ணீர் தேங்கிக் காணப்படுவதே இந்நிலைக்கும், குழந்தையின் அசாதார தோற்றத்துக்கும் காரணம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

100  ஆயிரம் குழந்தைகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் அவற்றில் ஒரு குழந்தை மாத்திரம் இப்படிப் பிறக்க நேர்கின்றதாம்.

குழந்தையை பார்த்த உடனேயே தாய் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. குழந்தையை பார்க்கவோ, பாலூட்டவோ மாட்டார் என்று அடம் பிடித்து வருகின்றார். தகப்பன் உட்பட நெருங்கிய சில உறவினர்கள் மாத்திரம் குழந்தையை பார்வையிட வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்னொரு பெண்ணிடம் இருந்து பால் பெறப்பட்டு கரண்டி மூலமாக குழந்தைக்கு ஊட்டப்படுகின்றது.

ஆயினும் இக்குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு இடையில் இறக்க நேரலாம் என்று அஞ்சப்படுகின்றது.

மூளையில் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்கின்றமையே இதற்கு ஒரே ஒரு தீர்வு ஆகும்.

ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்ன என்றால் இக்குழந்தையை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினர் மறுக்கின்றனர் என்பதுதான்.

உறவில் சோர்வு, ஐந்து காரணிகள்!


பத்து தம்பதிகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் இவர்களில் ஏழு பேர் பாலுறவின்போது மிகுந்த சோர்வு அடைகின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் இருந்து அறிய வந்து உள்ளது.

இந்நிலைமைக்கு முக்கிய காரணிகள் ஐந்து.

நிம்மதியான நித்திரை இல்லாமை, நீண்ட நேர வேலை, தம்பதிகளில் ஒருவர் படுக்கைக்கு காலம் தாழ்த்தி வருகின்றமை, பிள்ளைகள் காலம் தாழ்த்தி உறங்குகின்றமையும் வேளைக்கு தூக்கம் நீங்கி எழுகின்றமையும், ஓய்வு இல்லாத வாழ்க்கை முறை ஆகியனவே அந்த ஐந்து காரணிகளும்.


96 பையன்மாரை கற்பழித்த வியாபாரி!


விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்தோனேசியர் ஒருவர் 96 பையன்மாரை கற்பழித்தமையை ஒப்புக் கொண்டு உள்ளார்.

இவரின் வயது 34. பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் பெற்றோர் மேற்கொண்டு இருந்த முறைப்பாட்டை அடுத்து இவர் ஜகார்த்தாவில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

சிறுவனை இவ்வியாபாரி கடத்திச் சென்று 45 நாட்கள் தடுத்து வைத்து இருக்கின்றார் என்றும் அந்நாட்களில் பல தடவைகள் தொடர்ச்சியாக வல்லுறவு வைத்துக் கொண்டார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் இச்சிறுவனை வேறு ஆட்களுடனும் பலாத்காரமாக செக்ஸில் ஈடுபடுத்தினார் என்றும் இம்முறைப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 96 பையன்மாரை கடந்த இரு வருடங்களுக்கு இடையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார் என இவ்வியபாரி பொலிஸாருக்கு தெரிவித்து உள்ளார்.

இவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 15 வருட கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும்.

தலையில் கொம்புள்ள விசித்திர மனிதன்!


சீன நாட்டில் வயோதிப மனிதன் ஒருவருடைய தலையில் கொம்பு ஒன்று வளர்கின்றது.

தற்போது இக்கொம்பின் நீளம் 7.62 சென்ரி மீற்றர்.

இது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.

இவ்வளர்ச்சிக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் மருத்துவ உலகம் முழிக்கின்றது. சத்திர சிகிச்சை மூலம் கொம்பை அகற்ற முடியும். ஆனால் கொம்பு மீண்டும் அதே இடத்தில் முளைக்கலாம் என்பது வைத்திய நிபுணர்களின் அச்சம்.

கொம்பை உடைய மனிதருக்கு தற்போது 84 வயது.

ஒரு தலையில் தொப்பி ஒன்றை அணிகின்றமை மூலமாக இவர் கொம்பை மறைத்து வருகின்றார்.

A Husband for an Hour !


ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது.

இந்நிறுவனத்தின் பெயர்  A Husband for an Hour Limited.

இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள்.

ஆனால் எமது வாசகர்கள் குழம்பத் தேவை இல்லை.

இது ஒரு விபச்சார சேவை அல்ல.

வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள்.

பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.

ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மாத்திரமே.

Wednesday, January 12, 2011

விநோதமான மிருகங்கள்!






உலகில் விநோதமான பல ஜீவராசிகள் வாழ்கின்றன.






காலத்துக்கு காலம் பல புதிய ஜீவராசிகள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன.





இவ்விநோத ஜந்துக்கள் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, பெயரிடப்பட்டு உள்ளன.


இவற்றுள் 25 விநோத ஜீவராசிகளில் படங்களும், பெயர்களும் எமது இணையத்துக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.







இந்த விநோத ஜீவராசிகளை படங்களில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.






Tuesday, January 11, 2011

உடன்பிறப்புக்களை கொல்லும் ஜீவன்கள்!

       

வல்லமை உள்ளவன் தப்பித்துக் கொள்வான் என்பது வாழ்க்கை தரும் பாடம்.



இது மனிதனுக்கு மட்டும் அன்றி எல்லா ஜீவராசிகளுக்கும்கூட பொருந்தும்.


சில ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்காக உடன்பிறப்புக்களை கொல்ல வேண்டி இருக்கின்றது.


பிறந்த சில கண நேரங்களிலே உடன்பிறப்புக்களை கொல்கின்ற பயங்கர ஜீவராசிகளும் இருக்கின்றன.




அகிம்சையை போதிக்கும் மிருகங்கள்!



மனிதன் இன்று மிருகமாக மாறிக் கொண்டு இருக்கின்றான். ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்கின்றமை மானிட இயல்பாக மேலோங்கிக் காணப்படுகின்றது.



உண்மையான அன்பு, விசுவாசமான நட்பு ஆகியன மனித குலத்தின் மத்தியில் மலையேறிக் கொண்டு செல்கின்றன.



சுய நலம், பிரிவினை ஆகியன மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.



ஆறறிவு என்பது அழிவுக்கு காரணம் ஆகி கொண்டு இருக்கின்றது.



ஆனால் ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜீவராசிகள் அகிம்சை, காருண்யம் ஆகியவற்றை வெளிப்படுத்தி வருகின்றமையை கண்கூடாக காண முடிகின்றது.



இந்த ஜீவராசிகளில் பல இயற்கையின் படைப்பில் எதிரிகளாக இருக்கின்றன என்பது மிகவும் அதிசயிக்கத் தக்க விடயமாக உள்ளது.



பக்கங்கள்