சீனாவில் முன்னங்கால்களுடன் மாத்திரம் பிறந்த பன்றிக் குட்டி ஒன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஹீரோவாக உலா வருகின்றது.
இதற்கு பிறக்கும்போதே பின்னங்கால்கள் கிடையாது.
இதை கொன்று விடும்படி உரிமையாளருக்கு மற்றவர்கள் ஆலோசனை கூறி இருந்தனர்.
ஆயினும் இளகிய மனம் கொண்ட உரிமையாளர் இதை கொன்று விடவில்லை.
வளர்த்து வருகின்றார்.
பன்றிக் குட்டியும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகின்றது.
இதற்கு பின்னங்கால்கள் இல்லாதது ஒரு குறையே அல்ல.
முன்னங்கால்களை மாத்திரம் பயன்படுத்தி அன்றாட வாழ்க்கையை சாதாரணமாகவே தொடர்கின்றது.
பிறந்து ஒரு மாதத்தின் பின் இரு கால்களையும் பயன்படுத்தி மெல்ல மெல்ல அசைந்து பழகிய பன்றிக் குட்டி இப்போது அநாயாசமாகவே நடமாடுகின்றது.
இரு கால்களுடன் மாத்திரம் விலங்கு ஒன்று நடந்து திரிவது என்பது உண்மையில் மிகவும் கடினமான விடயம்.
இந்நிலையில் இப்பன்றியை காண மக்கள் கூட்டம் சமுத்திரமாக அன்றாடம் திரண்டு வருகின்றது.
இப்பன்றியின் பெயர் நம்பிக்கை என்பது. மனித குலத்துக்கு இது ஒரு வழிகாட்டி போலும்.
No comments:
Post a Comment