Saturday, January 15, 2011

இந்தியாவில் வேற்று கிரகவாசிகளின் சாயலில் குழந்தை!


இந்தியாவை சேர்ந்த தாய் ஒருவருக்கு வேற்றுக் கிரகவாசிகளின் சாயலில் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.

குஜராத்தை சேர்ந்த சொனால் வக்ஹெலா என்பவரே இக்குழந்தையை பிரசவித்தவர் ஆவார்.

குழந்தையின் தலை மாத்திரம் 2.15 கிலோ கிராம். குழந்தையின் தலை ஊதப்பட்ட ஒரு பலூனைப் போல் வீங்கிக் காணப்படுகின்றது.

மூளைக்குள் தண்ணீர் தேங்கிக் காணப்படுவதே இந்நிலைக்கும், குழந்தையின் அசாதார தோற்றத்துக்கும் காரணம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

100  ஆயிரம் குழந்தைகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் அவற்றில் ஒரு குழந்தை மாத்திரம் இப்படிப் பிறக்க நேர்கின்றதாம்.

குழந்தையை பார்த்த உடனேயே தாய் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. குழந்தையை பார்க்கவோ, பாலூட்டவோ மாட்டார் என்று அடம் பிடித்து வருகின்றார். தகப்பன் உட்பட நெருங்கிய சில உறவினர்கள் மாத்திரம் குழந்தையை பார்வையிட வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்னொரு பெண்ணிடம் இருந்து பால் பெறப்பட்டு கரண்டி மூலமாக குழந்தைக்கு ஊட்டப்படுகின்றது.

ஆயினும் இக்குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு இடையில் இறக்க நேரலாம் என்று அஞ்சப்படுகின்றது.

மூளையில் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்கின்றமையே இதற்கு ஒரே ஒரு தீர்வு ஆகும்.

ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்ன என்றால் இக்குழந்தையை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினர் மறுக்கின்றனர் என்பதுதான்.

No comments:

பக்கங்கள்