அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு மாத காலத்துக்கு சிங்கங்கள் இரண்டு அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டு ஒன்றில் வசிக்க உள்ளார்.
இவரின் பெயர் ஜேம்ஸ் லப்லொன். இவர் வன விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்துகின்றார். இதை நடத்த பணம் தேவைப்படுகின்றது.
இதனாலேயே இப்படி ஒரு துணிகர செயலில் இறங்குகின்றார். இவர் கடந்த சனிக்கிழமை சிங்கங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டுக்குள் பிரவேசித்தார்.
இரு சிங்கங்களுக்கும் அருகில் படுத்துத் தூங்குவார் என்றும் அவை சாப்பிடும்போது சாப்பிடுவார் என்றும் அறிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment