chai-yok என்பது கொரிய நாட்டு பாரம்பரிய நீராவிக் குளியல்.
பல நூற்றாண்டுகளாக அந்நாட்டில் நின்று நிலவி வருகின்ற ஒரு மருத்துவ குளியல்.
அதுவும் பெண்களுக்கான குளியல்.
இன்னும் தெளிவாக சொன்னால் பெண்களில் பிறப்பு உறுப்புக்கான பிரத்தியேக குளியல் சிகிச்சை இது.
பெண் உறுப்பு பிரதேசத்துக்கான இக்குளியல் சிகிச்சை உடலுக்கு ஆரோக்கியமானது, சுகாதாரமானது, சிறப்பானது என்பது கொரிய நாட்டவரின் நம்பிக்கை.
இக்குளியல் மன அழுத்தத்தை குறைக்கின்றதாம். தொற்றுக்களுக்கு எதிராக போராடும் சக்தியைக் கொடுக்கின்றதாம். விசேடமாக மாத விலக்குச் சக்கரச் செயல்பாட்டை ஒழுங்காக்குகின்றதாம். இன்னும் பல மருத்துவ நன்மைகள் உண்டு என்று நம்பப்படுகின்றது.
ஆனால் நவீன மருத்துவ விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுகின்றது. இக்குளியலை ஒரு சிகிச்சையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது. குறிப்பாக இக்குளியல் முறையால் மருத்துவ நன்மைகள் உண்டு என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று அடித்துக் கூறுகின்றது.
நீராவி ஒரு வேளை உள ரீதியான நன்மைகளை இப்பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்று சில சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் கொரிய நாட்டுப் பெண்கள் மத்தியில் இன்றும் இச்சிகிச்சை முறை உயிரோடுதான் வழ்கின்றது.
குறிப்பாக மாத விலக்கு முடிந்த கையோடு கொரிய பெண்கள் இக்குளியல் சிகிச்சையை வீட்டில் வழமையாக பெறுகின்றனர்.
கொதிக்கும் நீர் உள்ள பாத்திரம் கீழே வைக்கப்படும். அப்பாத்திரத்தில் இருந்து எழுகின்ற நீராவியை நேரடியாக உள்வாங்கக் கூடிய வகையில் நிர்வாணமாக தளபாடம் ஒன்றில் பெண் அமர்ந்து இருப்பார். பெண்ணின் உடல் முழுவதுக்கும் நீராவி உள்வாங்கப்படும். நீரில் மருத்துவ மூலிகைகள் கலக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment