Tuesday, March 1, 2011

குரங்குகளுக்கு விழா எடுக்கும் தாய்லாந்து மக்கள்!

 

தாய்லாந்து நாட்டின் லொப்பூரி என்கிற நகரத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை தோறும் குரங்களுக்கு மகத்தான விழா எடுக்கப்படுகின்றது.


குரங்குகள் பேரதிஷ்டத்தை கொடுக்க வல்லன என்று இந்நகரவாசிகள் நம்புகின்றனர்.


ஆகவேதான் விழா எடுத்துக் கௌரவிக்கின்றனர்

ப்ர பிராங் சம் ஜொட் என்கிற ஆலயத்துக்கு குரங்குகள் வர அழைக்கப்படுகின்றன.
 

ஆலயத்தில் வைத்து குரங்குகளுக்கு பழங்கள், பிஸ்கெற்றுக்கள், குளிர் பானங்கள் என்று பல ரகமான உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன.


இப்படையலுக்காக பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியன மாத்திரம் 2000 கிலோ வரை தேவைப்படுகின்றன.


No comments:

பக்கங்கள்