நீங்கள் பியர் பிரியரா?
அப்படி என்றால் நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செக் குடியரசு நாட்டில் அமைந்து இருக்கும் பியர் பிரியர்களின் சொர்க்கத்துக்கு சென்றே ஆக வேண்டும்.
இச்சொர்க்கத்தின் பெயர் Chodovar.
இது ஒரு தனி இராச்சியம் மாதிரிதான்.
ஆடம்பர ஹோட்டல்.
ஆனால் இந்த இராச்சியத்தில் எங்கு பார்த்தாலும் பியர் மயம்தான்.
குழாய்களை திறக்கின்றபோது தண்ணீர் வராது, பியர்தான் வரும்.
பியர் என்றால் குடிக்கின்றமைக்கு மாத்திரம்தான் என்று நினைத்து விடாதீர்கள்.
இங்கு பியர் குளியல் மிக விசேடமான அம்சம்.
பியரால் நிரப்பட்ட தொட்டிகளுக்குள் குளித்துக் கொண்டே பியரைக் குடிக்கலாம்.
பியர் குடிக்க இச்சொர்க்கத்துக்கு வருகின்ற பெண்கள் பியர் குளியலைப் பெரிதும் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment