Friday, March 25, 2011

இந்தியாவில் நாய்க் கடவுளுக்கு தனிக் கோவில்

வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார்.

ஆதி காலம் தொட்டு மனிதனின் மிக நெருங்கிய நண்பர்களாக நாய்கள் இருந்து வருகின்றன.

வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்கள் பெரிதும் வளர்க்கப்படுகின்றன.

நன்றி அறிதலின் அடையாளமாக விளங்குகின்றன.

வைரவரின் வாகனமாக நாய் இருந்து வருகின்றது.

ஆனால் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இராம நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நாய்களுக்கு என்று தனிக் கோவில் ஒன்று உண்டு.

மூலஸ்தான மூர்த்தி நாய்தான்.


மூலஸ்தான மூர்த்தியான நாய்க் கடவுளின் பெயர் ஸ்ரீ நாயிடோலி வீரப்பா.

ஸ்ரீ வீரமஸ்தி கேம்பம்மா என்று ஒரு கிராமிய பெண் தெய்வம் இருக்கின்றார்.

இக்கிராமிய தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில்தான் நாய்க் கடவுளின் ஆலயம் உள்ளது.

கேப்பம்பா கிராமிய தெய்வத்தின் மெய்ப்பாதுகாவலனாக நாய்க் கடவுள் விளங்குகின்றார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

நாய்க் கடவுளிடம் பக்தர்கள் குறைகளை முறையிடுகின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆலயத்துக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கிராம மக்களுக்கு வருங்காலத்தை எடுத்து உரைக்க வல்ல ஒரு தீர்க்க தரிசியாகவும் ஒரு வகையில் நாய்க் கடவுள் விளங்குகின்றார்.

அதாவது கிராமத்துக்கு ஏதாவது கேடு அல்லது தீங்கு ஏற்பட இருக்கின்றது என்றால் நாய்க் கடவுள் வெளிப்படுத்து விடுவார் என்பது ஐதீகம்.


பிறக்கின்ற குழந்தைகளுக்கு இக்கிராமத்தவர்களில் அநேகர் நாய்க் கடவுளின் பெயரைத்தான் சூட்டுவார்கள்.

ஆண் குழந்தை என்றால் வீரப்பா என்றும் பெண் குழந்தை என்றால் வீரன்னை என்றும் பெயரிடுவார்கள்.

இந்தியாவில் சாதிக் கொடுமை தலை விரித்தாடுகின்றது. ஆனால் நாய்க் கடவுள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவராக சித்திரிக்கப்படுகின்றார்.

ஏனெனில் நாய்க் கடவுளின் பூசகர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.




No comments:

பக்கங்கள்