Wednesday, March 2, 2011

மரணத்தை சரியாக எதிர்வு கூறும் அதிசய பூனை!


பிரித்தானியாவின் லண்டன் தலைநகரில் உள்ள வைத்தியசாலையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் மரணத்தை சரியாக தீர்க்கதரிசனம் செய்து விடுகின்றது.

இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளர்களின் மரணத்தை சரியாக எதிர்வு கூறி உள்ளது.

இப்பூனையின் பெயர் ஒஸ்கார்.

ஒரு குறிப்பிட்ட நோயாளி இறக்கப் போகின்றார் என்று உணர்ந்தவுடம் இப்பூனை அந்நோயாளிக்கு அருகில் சென்று அமர்ந்து விடும், 24 மணித்தியாலங்களுக்கு நோயாளியும் இறந்து விடுவார்.


ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அருகில் இப்பூனை போய் அமர்ந்தவுடன் வைத்தியசாலை அதிகாரிகளால் நோயாளியின் குடும்பத்தினர் அழைக்கப்படுவார்கள். நோயாளிக்கு பிரியா விடை சொல்ல அனுமதிக்கப்படுவார்கள். சில வேளைகளில் பாதிரிமார் அழைக்கப்பட்டு விசேட பிரார்த்தனைகள் நடத்துவார்கள்.

ஆனால் நோயாளர்களில் அநேகருக்கு இப்பூனையின் அபார திறமை தெரியாது.


உணர் திறனை வைத்தே இப்பூனை மரணத்தை எதிர்வு கூறும் சக்தியை பெற்று உள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக இவ்வைத்தியசாலையில் இப்பூனை வசிக்கின்றது..

இப்பூனையின் அபார திறமையை புகழ்ந்து புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இவ்வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதிகளில் ஒருவரான டேவிட் ரோஸா.

No comments:

பக்கங்கள்