இந்திய கிறிக்கெற் அணி உலக கிண்ணத்தை இம்முறை கைப்பற்றுகின்ற பட்சத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பிறந்த மேனியாக ஓடுவார் என்று வீர சபதம் செய்து உள்ளார் அந்நாட்டு நட்சத்திர அழகிகளில் ஒருவரான பூனம் பாண்டே.
உலக கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் சனிக்கிழமை மும்பையில் இடம்பெற உள்ளது.
பூனம் பாண்டேக்கு வயது 20. இந்தியாவின் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்து வருகின்ற சூப்பர் அழகிகளில் ஒருவர். கிறிக்கெற் பைத்தியமும் ஆவார்.
இந்திய சட்ட திட்டங்கள், இந்திய கிறிக்கெற் வாரியம் ஆகியன அனுமதிக்கும் பட்சத்தில் இச்சபதத்தை நிறைவேற்றியே தீருவார் என்று உறுதியாக தெரிவித்து உள்ளார். விளம்பரம், புகழ் ஆகியவற்றுக்காக அன்றி இந்திய அணியை ஊக்குவிக்கின்றமைக்காக மாத்திரமே இக்கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார் என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.
கடந்த வருடம் உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. அக்கிண்ணத்தை பராக்குவே நாட்டு அணி கைப்பற்றுகின்ற பட்சத்தில் தலைநகர வீதியில் நிர்வாணமாக ஓடுவார் என்று அறிவித்து இருந்தார் அந்நாட்டு சூப்பர் அழகி லாரிஸா ரிக்லைம். ஆனால் பராக்குவே அணி தோல்வி கண்டு விட்டது.
இந்நிலையில் லாரிஸாவின் பாணியில் ஓட்டத்துக்கு தயாராகின்றார் பூனம்.
No comments:
Post a Comment