Tuesday, March 15, 2011

ஊனத்தை தோற்கடித்த மாமனிதன்

ஊனம் என்பது உடலில் அல்ல என்பதற்கு உதாரண புருஷராக இருக்கின்றார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் குரொக்ஸோன் என்பவர்.


இவருக்கு கைகள், கால்கள் கிடையாது. 

16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரமான விபத்து ஒன்றில் இவற்றை இழந்து விட்டார்.


இப்போது வயது 42. 

செயற்கை உறுப்புக்களை பொருத்திக் கொண்டு நீச்சல் வீரராக உலா வருகின்றார்.



22 மைல் அகலம் உடைய ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க வேண்டும் என்பது இவரது பேரவா.


இக்கால்வாயை முதன் முதல் கடந்த கைகள் மற்றும் கால்கள் இல்லாத மனிதர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்று துடிக்கின்றார்.

கடந்த இரண்டு வருடங்களாக நீச்சல் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.


No comments:

பக்கங்கள்