உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதர் என்கிற சாதனைக்கு இன்னும் சில மாதங்களில் சொந்தக்காரர் ஆகின்றார் பிலிப்பைன்ஸ் நாட்டின் நோர்டே மாநிலத்தைச் சேர்ந்த ஜன்ரி பாலாவிங். எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி 18 வயதை அடைகின்றார்.
இவர் அப்போது இப்பெருமையை பெறுவார்.
இவர் முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடிய பின்னர் இதுவரை உயரத்தில் வளரவே இல்லை.
எனவே எதிர்வரும் பிறந்த தினத்துக்கு இடையில் இவர் உயரத்தில் ஓரங்குலம்கூட வளர சந்தர்ப்பமே கிடையாது.
எழுந்து நிற்கின்றமைக்கோ, நடந்து திரிகின்றமைக்கோ உடல் இவருக்கு இடம் கொடுக்கவில்லை.எப்போதும் இன்னொருவரிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை.
ஆயினும் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்கிற பெருமையை பெற இருக்கின்றமையை அறிந்து மிகவும் புளகாங்கிதம் அடைந்து உள்ளார்.
இவரது கிராமம் மிகவும் பின் தங்கியது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மூத்த மகன். இவருக்கு இளைய சகோதரர்கள் மூவர். இளைய சகோதரர்கள் சாதாரண உயரம் உடையவர்கள். பாடசாலைக்கு சென்று பயில்கின்றார்கள்.
ஆனால் இவர் பாடசாலைக்கு செல்கின்றமை கிடையாது. வீட்டிலேயே தங்கி இருக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தாயின் அரவணைப்பில் இருக்கின்றார். அநேகமான நேரங்களில் பெற்றோரின் இடுப்பில்தான் அமர்ந்து இருப்பார்.
உலகின் குள்ள மனிதர் என்கிற கின்னஸ் சாதனைக்கு தற்போது உரியவர் நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர தாபா மாகா. உயரம் 26.4 அங்குலம்.
1 comment:
வானம் அளவு உயர இருக்கும் குள்ள மனிதன்!"
அருமையான பதிவு குள்ள மனிதருக்கு மனதளவில் உயர்ந்த மனிதருக்கு என் வாழ்த்துக்கள்
Post a Comment