உடலை மிகவும் வருத்திச் செய்கின்ற வீர நடனங்கள் ஏராளமானவை இருக்கின்றன.
இவ்வகை நடனங்களுள் மிகவும் கடினமானது என்று நம்பப்படுவது மல்லாகம்ப்.
இதன் தாயகம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம். 12 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் ஆனது.
மல்லா என்பது தொடையை குறிக்கும்.
கம்ப் என்பது கம்பை குறிக்கும்.
தொடைகளுக்கு மிகுந்த பலத்தை கொடுக்க வல்ல நடனம் இது.
கம்பு மேல் ஏறி நின்று புரிகின்ற சாகச நடனம்.
இது ஒரு வீர சாகச விளையாட்டு நடன கலை ஆகும்.
பல் நூற்றாண்டு காலமாக இக்கலை அருகிப் போய் இருந்ததது.
அண்மைய காலங்களில் மறுவாழ்வு பெற்றது.
இக்கலையை அறிந்த ஆசாரியார்கள் இளம் தலைமுறையினருக்கு கற்பித்து வருகின்றனர்.
கம்பு மேல் ஏறுகின்றமை இலேசுப்பட்ட காரியம் அல்ல. கம்பு நாட்டப்பட்டு இருக்கும். கம்பில் ஒரு வகை எண்ணெய் பூசப்பட்டு இருக்கும். கம்பின் அடிப் பகுதியின் உடைய விட்டம் 55 சென்ரி மீற்றர், நுனிப் பகுதியின் உடைய விட்டம் 35 சென்ரி மீற்றர். பொதுவாக தேக்கு மரத்தில் இக்கம்பு செய்யப்பட்டு இருக்கும்.
ஆனால் இவ்வீர விளையாட்டு இந்தியாவில் தேசிய விளையாட்டுக்களில் ஒன்றாக இன்னமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இளம் தலைமுறையினர் இவ்வீர விளையாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டு உள்ளார்கள். குறிப்பாக கண் பார்வை இல்லாத இளைஞர்களை இக்கலை பெரிதும் ஈர்த்து உள்ளது.
உடலின் வலிமை, உடல் சம நிலை ஆகியனவே இவ்வீர விளையாட்டுக்கு அத்தியாவசியம். ஆகவேதான் கண் பார்வை இல்லாதவர்களும் இவ்வீர விளையாட்டைப் பயின்று சாகசங்களைப் புரிய முடிகின்றது.
No comments:
Post a Comment