உண்மையான காதலுக்கு என்றும் மரணம் கிடையாது.
உண்மைக் காதலை மரணம் பிரித்து விடாது.
இதை நிரூபிப்பது போல் கடந்த வருடம் சீனாவில் ஒரு வித்தியாசமான திருமணம் இடம்பெற்றது.
மணமகனின் பெயர் Zhuang Huagui. வயது - 26. மணமகளின் பெயர் Hu Zhao. வயது 21.
இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
பெப்ரவரி - 04 ஆம் திகதி திருமணம் இடம்பெற நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் எதிர்பாராத திருப்பம்.
திருமணம் ஜனவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது.
மணமகன் அழகாக அலங்கரித்துக் கொண்டார்.
மணமகளும் அலங்கரிக்கப்பட்டார்.
சவப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த மண மகளை இல்லை... பிண மகளை மனைவி ஆக்கினார் மணமகன் - காதலன்.
ஆம். சுமார் ஒரு வாரத்துக்கு முன் வீட்டில் கொள்ளை அடிக்க வந்து இருந்த கொள்ளையர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகி மணமகள் இறந்து விட்டார்.
இருந்தாலும் மணமகன் காதலை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. காதலி என்று இதயத்தில் அமர்த்தி வைத்து இருந்த அந்த யுவதியை, மணமகள் என்று மனதில் வரித்து வைத்து இருந்த அந்த பெண்ணை திருமணம் செய்தே தீருவார் என்று பிடிவாதமாக இருந்தார்.
மரணம்கூட இத்திருமணத்தால் நெகிழ்ந்து போய் இருக்கும்.
No comments:
Post a Comment