கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா, மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறு யார்? என்று பாடி இருக்கின்றார் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர்.
நாகரிகம் எவ்வளவுதான் வளர்ந்து விட்டாலும் பாரம்பரியம் என்பது இன்னமும் மலையேறி விடவில்லை.
கிராமத்துத் தோட்டங்களில் இன்றும் வெருளிகள் காவல் கடமைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.
இது உலகப் பொதுமை என்றுகூட சொல்லலாம்.
பறவைகள்,மிருகங்கள், திருடர்கள் ஆகியோரிடம் இருந்து தோட்டங்களைப் பாதுகாப்பது சம்பளம் பெறாத இக்காவலாளிகளின் வேலை.
ஆனால் வெருளிகளை வடிவமைத்து சரிக் கட்டுகின்றமைகூட ஒரு கலையாக பரிணமித்து விட்டது.
பல நாடுகளிலும், பல விதங்களில் வெருளிகள் அமைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment