காதலில் தோல்வி அடைந்தவர்கள், சன்னியாசிகள், மந்திரவாதிகள், கேடிகள் போன்றவர்கள்தான் தாடி வளர்ப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஆனால் தாடி வளர்க்கின்றமைகூட ஒரு கலையாக இன்று பரிணமித்து உள்ளது.
வளர்க்கின்ற தாடியை ஒழுங்காக பராமரிக்கின்றமையும் ஒரு கலைதான்.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கின்றமைக்காகவே வித்தியாசமாக தாடி வளர்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள்.
பிரபலத்துக்காக தாடி வளர்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள்.
உலக சாதனைக்காக தாடி வளர்க்கின்றவர்கள் உள்ளார்கள்.
பொழுதுபோக்குக்காக தாடி வளர்க்கின்றவர்கள் உள்ளார்கள்.
போட்டிகளுக்காக தாடி வளர்க்கின்றவர்கள் உள்ளார்கள்.
No comments:
Post a Comment