ஈரான் நாட்டின் வட பகுதியில் அமைந்து இருக்கின்றது காலித் நபி மயானம்.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து இழுக்கும் சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது.
குறிப்பாக இளம் தலைமுறையினரின் கவனத்தை பெரிதும் கவர்ந்து உள்ளது.
காரணம் இங்கு நாட்டப்பட்டு இருக்கும் நினைவுத் தூபிகள்.
இத்தூபிகள் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
குறைந்தது 600 பேர் இங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று தூபிகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டு உள்ளது.
இறை தூதர் முஹமட் நபி அவதரிக்கின்றமைக்கு 40 வருடங்களுக்கு முன் தோன்றிய இறை தூதர் காலித் நபியின் நினைவுத் தூபியும் இங்குதான் உள்ளது.
இதனால்தான் காலித் நபி மயானம் என்று இச்சுடலை அழைக்கப்படுகின்றது.
ஆனால் இளம் தலைமுறையினர் அடங்கலாக உல்லாசப் பயணிகளை இம்மயானம் பெரிதும் கவர்ந்து இழுப்பதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கின்றது.
அது என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
இங்கு நினைவுத் தூபிகள் ஆணுறுப்புக்கள், பெண்ணுறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவத்தில் அமைக்கப்பட்டுருக்கின்றன என்பதே அக்காரணி.
இச்சுடலையைப் பாலியல் சுடலை என்றும் அழைக்கலாம் போலும்.
No comments:
Post a Comment