சீனாவில் வைத்திய கலாநிதி ஒருவர் வித்தியாசமான முறையில் தொழில் வாய்ப்புக்காக விளம்பரம் செய்து உள்ளார்.
இவர் வாடகைக்கு மாடல் அழகி ஒருவரை பெற்றுக் கொண்டார்.
சன நடமாட்டம் மிகுந்த வீதி ஒன்றில் நாற்காலியில் அமர்ந்தார்.
மாடல் அழகியை அரைநிர்வாண கோலத்தில் நிற்க வைத்தார். மாடல் அழகியின் கைகளில் விளம்பர பதாகையை கொடுத்து இருந்தார்.
மாடல் அழகி உள்ளாடைகளை மாத்திரம் அணிந்து காட்சி கொடுத்தார். விளம்பர பதாகையில் வைத்தியரின் திறமை, தொழில் அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகியன எழுதப்பட்டு இருந்தன.
தற்போது இந்நாட்டில் கடும் குளிர். மாடல் அழகி வீதியில் உள்ளாடைகளுடன் நின்றபோது இக்குளிரில் நடுங்கி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவரின் உடல் குளிரில் சிவந்து விட்டது. 20 நிமிடங்கள் வரை இச்சேவையை வழங்கினார்.
வைத்தியரின் இவ்வித்தியாசமான விளம்பர உத்தி எதிர்பார்த்து இருந்தமையை விட அதிக பலனை கொடுத்தது.
வீதியால் சென்றோரும், வந்தோரும் குவிந்து நின்று பார்த்தனர்.ஏராளமானோர் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
ஊடகவியலாளர்கள் நேரில் அங்கு வந்து வைத்தியரை பேட்டி கண்டனர்.
ஆயினும் இவருக்கு சிறந்த சேவை வழங்குனர் கிடைப்பாரா? என்பது தெரியவில்லை.
வைத்தியரின் விளம்பர உத்தி மக்களை பேராச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.
இவ்வைத்தியர் ஒரு மனோ தத்துவ நிபுணர். ஆகவேதான் இப்படி ஒரு விளம்பர உத்தியை கையாண்டு இருக்கின்றார்.
No comments:
Post a Comment