Saturday, March 19, 2011

யப்பானில் பூனைகளின் தீவு!


யப்பானிய நாட்டில் பூனைகளின் தீவு என்று ஒரு இடம் இருக்கின்றது. மனிதர்களை காட்டிலும் பூனைகள் இங்கு அதிகம் வசிப்பதால் இத்தீவு இப்பெயரால் அறியப்படுகின்றது. 


ஆயினும் இத்தீவின் உத்தியோகபூர்வமான பெயர் ரஸிரொஜிமா.இஸினோமகி நகரத்தில் அமைந்து உள்ளது.


பூனைகளை வளர்த்து உணவு ஊட்டுகின்றமை செல்வச் செழிப்பைத் தரும் என்று இத்தீவுவாசிகள் நம்புகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பூனைகளின் எண்ணிக்கை இத்தீவில் அதிகமாக இருந்து வருகின்றது.

100 மனிதர்கள்வரை இத்தீவில் வசிக்கின்றனர்.அநேகர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவருக்கு மாத்திரம் 37  வயது. ஏனையோருக்கு 60 வயதுக்கு மேல். 50 சதவீதமானோருக்கு 65 வயதுக்கு மேல். 


இத்தீவில் பூனைகளுக்கு கோவில்கள், நினைவுத் தூபிகள் ஆகியனவும் உள்ளன. பூனை உருவத்தில் வீடுகள், கட்டிடங்கள் ஏராளமானவை கட்டப்பட்டு இருக்கின்றன.




No comments:

பக்கங்கள்