குழந்தைகள் இரண்டு வயது அளவில்தான் சரியாக நடக்கவும், ஒழுங்காக எழுந்து நிற்கவும் பழகிக் கொள்கின்றன.
ஆனால் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்கிற பழ,மொழிக்கு அமைய இந்தியாவில் பாம்பாட்டிகளாக திரியும் நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்து இருக்கின்றன. கையாளவும் செய்கின்றன.
இப்பாம்பாட்டிக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அனைத்தும் இவ்வித்தையை கட்டாயம் கற்று வைத்து இருக்க வேண்டும்.
இப்பிள்ளைகள் இரண்டு வயதில் இருந்து நாக பாம்புகளுடன் பழக விடப்படுகின்றனர்.
பாம்புகளை மயக்கும் வித்தையின் அனைத்து இரகசியங்களையும் பத்து வயதுக்குள் கற்றுத் தேர்ந்து விடுவார்கள்.
மகுடியை வாசிக்கின்றமை மூலம் நாக பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை ஆண்கள் கட்டாயம் அறிந்து இருத்தல் வேண்டும்.
பாம்புகளை பராமரிக்கும் கலையை பெண்கள் அறிந்து இருக்க வேண்டும்.
இப்பாம்பாட்டிகள் பாம்புகளைச் சொந்தப் பிள்ளைகளாகவே நடத்துகின்றனர்.
இவர்கள் பாம்புகளை ஏழு மாதங்களுக்கு மேல் வேறு இடங்களில் வைத்து இருப்பதில்லை, அவற்றின் சொந்த புற்றுகளுக்கு அனுப்பி விடுவார்கள். ஏழு மாதங்களுக்கு மேல் வேறு இடங்களில் வைத்திருக்கின்றமை பாம்புகளை அவமானப்படுத்தும் நடவடிக்கை என்கின்றனர். ஆரேனும் ஒரு பாம்பாட்டி ஏழு மாதங்களுக்கு மேல் வேறு இடங்களில் ஒரு பாம்பை வைத்து இருக்கின்றபோதுதான் அப்பாம்பிடம் கடி வாங்க நேர்கின்றது என்பது இவர்களின் நம்பிக்கை, அனுபவம்.
இவர்கள் பாம்புகளின் விஷப் பற்களை பிடுங்குகின்றமை கிடையாது. மாறாக ஒரு வகை மூலிகைகள் பாம்புகளுக்கு தின்னக் கொடுப்பார்கள். அம்மூலிகைகள் பாம்புகளின் விஷத்தை கெடுதல் அற்றது ஆக்கி விடும்.
ஆனால் பாம்புகளை வசப்படுத்துகின்றமை 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொலிஸாரைக் கண்டமையுடன் இப்பாம்பாட்டிகள் அஞ்சுவர். எந்தவொரு இடத்திலும் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கி இருக்க மாட்டார்கள்.
பாம்புகளை வசப்படுத்தும் கலை பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
No comments:
Post a Comment