Tuesday, March 8, 2011

பறக்கும் வீடு: மனிதனின் புதிய சாதனை!


அமெரிக்காவின் National Geographic Channel இன் உடைய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிஜமான பறக்கும் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.


Disney Pixar  திரைப்படத்தில் கற்பனைப் பாத்திரமாக வருகின்ற பறக்கும் வீடு இத்திட்டத்துக்கான ஊக்கியாக இருந்து உள்ளது.


ஈலியம் வாயு நிரப்பப்பட்ட 300 பலூன்கள் நிஜமான பறக்கும் வீட்டின் உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.


விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பலூன் பைலட்டுகள், தொண்டர்கள் ஆகியோரின் காத்திரமான உழைப்பில் நிஜமான பறக்கும் வீடு கலிபோர்னியா கடல் கரையில் இருந்து பறக்க விடப்பட்டு உள்ளது.


வீடு சிறியதுதான்.  4.8m x 4.8m x 5.5m வீடு.

மிகவும் இலேசான பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டு இருக்கின்றது.


Disney Pixar திரைப்படத்தில் வருவதைப் போலவே இருவர் இந்நிஜமான பறக்கும் வீட்டில் பறந்தனர்.

No comments:

பக்கங்கள்