Tuesday, March 15, 2011

காதுகளில் மயிர் வளர்த்து இந்தியர் சாதனை


மனிதர்களாக பிறக்கின்ற ஒவ்வொருவருமே ஏதாவது சாதனை நிலைநாட்டியே தீர வேண்டும் என்று துடிக்கின்றார்கள்.

உலக சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் சொந்தப் பெயரை முத்திரை பதிக்க வேண்டும் என்று அடாத பாடுபடுபவர்களும் இருக்கின்றனர்.


ஆனால் ஒரு இந்தியர் மிகவும் வித்தியாசம் ஆன உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.

இவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். காதுகளில் அதிக மயிர் வளர்த்து இருப்பவர் என்பதே இவரின் உலக சாதனை.


2003 ஆம் ஆண்டு இச்சாதனையை நிலைநாட்டினார்.

அப்போது இவரின் காதுகளில் இருந்த மயிரின் நீளம் ஐந்து அங்குலம்.

இப்போது 10 அங்குலம் வரை வளர்ந்து விட்டது.


ஆனால் கின்னஸ் சாதனையாளர் என்கிற மதிப்பை அநேக இந்தியர்கள் வழங்குகின்றார்கள் இல்லை என்று கவலைப்படுகின்றார். 

இந்திய அரசுகூட கௌரவிக்கத் தவறுகின்றது என்கின்றார்.




No comments:

பக்கங்கள்