பிறேசில் நாட்டுக் கலைஞர் ஒருவர் பழைய கைக்கடிகாரங்களின் பாகங்களை மாத்திரம் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி உள்ளார்.
இக்கலைஞரின் பெயர் Jose Geraldo Reis Pfau. இவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மிக நீண்ட காலமாகவே அலாதிப் பிரியம். 1960 களில் இவ்விருப்பம் ஆரம்பித்து இருக்கின்றது.
இவர் பல ரகங்களையும் சேர்ந்த மோட்டார் சைக்கிள்களை சொந்தமாக வைத்து இருக்கின்றார்.
மரப் பலகைகள், வயர்கள் போன்ற பொருட்களில் அமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பற்றி அறிந்து இருக்கின்றார்.
இக்கைவண்ணங்களைப் போலவே சொந்தமாக உருவாக்க தீர்மானித்தார்.
கைக்கடிகாரக் கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் இவருக்கு இருக்கின்றார்.
இந்நண்பனின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் பழைய கைக்கடிகாரங்களை சேகரித்தார்.
பழைய கைக்கடிகாரங்களை தந்து விட்டு புதிய கைக்கடிகாரங்களை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று நண்பன் விளம்பரம் செய்தார்.
இப்பிரசாரம் மிகவும் கை கொடுத்தது.
பழைய கைக்கடிகாரங்களின் பாகங்களை மாத்திரம் பயன்படுத்தி விதம்விதமான மோட்டார் சைக்கிள்களை கலைஞர் உருவாக்கினார்.
No comments:
Post a Comment